இன்றைக்கு ஏதாவது ஸ்பெஷலாக ஸ்நாக்ஸ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியெனில் பலா காயை வைத்து ஒரு பக்கோடா செய்து கொடுங்கள். சிலருக்கு பலா காயை வைத்து என்ன செய்வது அதன் சுவை எப்படி இருக்கும் என்ற சந்தேகம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பலா காயை வைத்து பக்கோடா செய்து பாருங்கள். யாரும் எதிர்பார்க்காத பக்கோடாவாக இது இருக்கும். பலா காயை வைத்து செய்யும் பக்கோடாவின் சுவை அருமையாக இருக்கும். அனைவரும் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி இப்போது பலா காயை வைத்து பக்கோடா எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

  • பலா காய் - 1
  • உப்பு - சுவைக்கேற்ப
  • பெருங்காயத்தூள் - 1/2 சிட்டிகை
  • கடலை மாவு - 1 கப்
  • அரிசி மாவு - 1/2 கப்
  • பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
  • தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • மல்லி தூள் - 1 டீஸ்பூன்
  • ஆம்சூர் பவுடர் (மாங்காய் பொடி) - 1/2 டீஸ்பூன்
  • ஓமம் - 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை

  • முதலில் பலா காயை சிறு துண்டுகளாக நறுக்கி அதன் விதை பகுதியை நீக்கிடவும்.
  • அதன் பிறகு ஒரு குக்கரில் நறுக்கி பலா காய், 1/2 கப் தண்ணீர், சிறிதளவு உப்பு மற்றும் 1 சிட்டிகை பெருங்காயத்தூள் மூடி வைத்து குறைவான தீயில் ஒரு விசில் இறக்கவும்.
  • பின்னர் ப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து, தண்ணீரை வடிகட்டி பலா காயை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
  • இப்போது ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சுவைக்கேற்ப உப்பு போட்டு சிறிது சிறிதாக நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  • அதன் பிறகு, இந்த மாவு கலவையில் தனி மிளகாய் தூள், பச்சை மிளகாய், மல்லி தூள், ஆம்சூர் பவுடர், கரம் மசாலா மற்றும் ஓமம் சேர்த்து 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிரட்டி கொள்ளவும்.
  • இப்போது இந்த கரைசலில் வேகவைத்த பலா காய் துண்டுகளை சேர்த்து கலந்து சிறிது மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். மிருதுவான உருண்டைகளை தயார் செய்ய உங்கள் கரைசலை சேகரிக்கவும்.
  • அடுத்ததாக, ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் நன்கு சூடானதும் அதில் பிரட்டி வைத்த பலா காய் பக்கோடா கலவையை தனி தனியாக சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  • பொரித்த பக்கோடாக்களை தக்காளி கெட்ச்அப் அல்லது கொத்தமல்லி மற்றும் தக்காளி புளிப்பு சட்னியுடன் பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.